ஸ்ரீராம் பிராபர்டீஸ் லிமிடெட் - கோப்புப் படம் 
வணிகம்

ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.8.57 கோடி!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்ரீராம் பிராபர்டீஸ் லிமிடெட் அதன் செப்டம்பர் வரையான காலாண்டு முடிவில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8.57 கோடியாக உள்ளதாக அறிவித்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்ரீராம் பிராபர்டீஸ் லிமிடெட், செப்டம்பர் வரையான அதன் காலாண்டு முடிவில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8.57 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ.0.79 கோடி நிகர இழப்பை சந்தித்தது. நிதியாண்டின் 2-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.229.01 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்ரீராம் பிராபர்டீஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கோபாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

நிதி செயல்திறன் சற்று மந்தமாக உள்ள நிலையில் இடைநிலை சிக்கல்கள் தளர்த்தப்பட்டதால், இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதி ஆரோக்கியமான மீட்சியை எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்தியாவின் முன்னணி குடியிருப்பு ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒன்றான ஸ்ரீராம் பிராபர்டீஸ் லிமிடெட் சென்னை, பெங்களூரு, புனே மற்றும் கொல்கத்தாவில் தனது இருப்பைக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ.88.66 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சந்தையில் டக்சன் உற்பத்தியை நிறுத்திய ஹூண்டாய்!

வாரணாசியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரிலையன்ஸ் உடன் இணையும் அஜித் குமார்!

உடம்பை வளர்த்தேன்... மஞ்சு வாரியர்!

இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்!

SCROLL FOR NEXT