வணிகம்

டிசிஎம் ஸ்ரீராம் 3வது காலாண்டு லாபம் 19% சரிவு!

டிசிஎம் ஸ்ரீராம் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19% சரிவைக் கண்டு, ரூ.212.11 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: டிசிஎம் ஸ்ரீராம் லிமிடெட், 3வது காலாண்டில் தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் 19% சரிவைக் கண்டு, ரூ.212.11 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 262.14 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் ரூ.55 கோடி செலவினம் காரணமாக, நிதியாண்டின் 3வது காலாண்டிற்கான வரிக்குப் பிந்தைய லாபம் 19% குறைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

2025-26 நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.4,031.99 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ரூ.3,559.98 கோடியாக இருந்ததாக தெரிவித்தது.

நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.2,185.64 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,871.75 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

இதனிடையில், 3வது காலாண்டில் நிறுவனம் ரூ.56.14 கோடி ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு: சாலையில் 6 அடி உயரத்துக்கு 38 கி.மீ. படர்ந்த பனி! வெளியேற முடியாமல் தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு!

புதிய ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமானது சமத்துவமில்லாத இந்தியா: காங்கிரஸ்

டி20 உலகக் கோப்பையை வெல்ல மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிக வாய்ப்பு: பிராவோ

ஓ ரோமியோ படத்தில் திஷா பதானியின் கவர்ச்சி நடனம்!

SCROLL FOR NEXT