ரியல்மி நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் நவ. 20 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட் போன், 200 எம்பி கேமிரா, 7,000 எம்ஏஎச் (மில்லிஆம்ப்ஸ் ஹவர்ஸ்) பேட்டரி திறன் கொண்டது.
பிராசஸர் மற்றும் டிஸ்பிளே
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் மூலம் இயக்கப்படும். இதன் டிஸ்பிளே 2கே தெளிவுத்திறன் அம்சம் கொண்டது.
144 ஹட்ஸ் ரெஃபிரஷ் ரேட் மற்ரும் 7,000 நிட்ஸ் பிரகாசத்துடன் கூடிய 6.79 அங்குல க்யூ.எச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
ஐ.பி. 69 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதால், தண்ணீர் புகாத வகையில், உறுதித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஆர்1 கிராபிக்ஸ் சிப், சிறந்த கேமிங் மற்றும் கிராபிக்ஸ் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.
இந்த போனில் உள்ள அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார், வேகமான மற்றும் துல்லியமான அன்-லாக் அனுபவத்தைக் கொடுக்கிறது. புகைப்பட ஆர்வலர்களுக்கு இந்த போன் சிறந்த தேர்வாக இருக்கும்.
ரேம், கேமிரா மற்றும் பேட்டரி
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் ஒரு டிபி வரையிலான உள்நினைவகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேரியண்டுகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.
7,000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. 120 வாட்ஸ் சார்ஜர் மூலம் சில நிமிடங்களில் முழு சார்ஜ் ஏற்ற முடியும். 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் உபயோகிக்கலாம், ஒரு முறை சார்ஜ் செய்தால் 523 மணிநேரம் நிற்கும், 21 மணிநேரம் யூடியூப் பார்க்க முடியும் என்று ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேமிராவைப் பொருத்தவரை 50 எம்பி பிரைமரி கேமிரா, 50 எம்பி அல்ட்ரா-வைட்-லென்ஸ் மற்றும் 200 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் அடங்கிய டிரிபிள் கேமிரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்பி செல்ஃபி கேமிரா உள்ளது.
இந்த போனின் எடை 214 கிராம். டைரி வயட் மற்றும் அர்பன் புளூ நிறத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இந்த போனின் டாப் வேரியண்ட் விலை ரூ. 64,000 ஆக உள்ளது. இந்தியாவுக்கான விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.