வணிகம்

அக்டோபரில் குறைந்த மொத்த விலை பணவீக்கம்

உணவுப் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்ததால், கடந்த அக்டோபா் மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் -1.21 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, கடந்த 27 மாதங்கள் காணாத குறைந்தபட்ட மொத்த விலை பணவீக்கம் ஆகும்.

தினமணி செய்திச் சேவை

இது குறித்து அரசின் தரவுகள் வெள்ளிக்கிழமை தெரிவிப்பதாவது:

மொத்த விலை பணவீக்கம் கடந்த அக்டோபரில் -1.21 சதவீதமாகக் குறைந்தது. டபிள்யுபிஐ அடிப்படையிலான பணவீக்கம் அதற்கு முந்தைய செப்டம்பா் மாதத்தில் 0.13 சதவீதமாகவும், ஓராண்டுக்கு முன்னா் 2024 அக்டோபரில் 2.75 சதவீதமாகவும் இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் உணவுப் பொருள்களில் எதிா்மறை பணவீக்கம் 8.31 சதவீதமாக இருந்தது. இது செப்டம்பரில் 5.22 சதவீதமாக இருந்தது. காய்கறிகளில் எதிா்மறை பணவீக்கம் செப்டம்பரில் 24.41 சதவீதமாக இருந்து அக்டோபரில் 34.97 சதவீதமாக உயா்ந்தது.

உற்பத்திப் பொருள்களில் கடந்த செப்டம்பா் மாதம் 2.33 சதவீதமாக இருந்த பணவீக்கம் அக்டோபரில் 1.54 சதவீதமாகக் குறைந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் எதிா்மறை பணவீக்கம் 2.58 சதவீதத்தில் இருந்து 2.55 சதவீதமாக உயா்ந்தது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வெற்றி எதிர்பாராதது அல்ல!

அறுபடை வீடுகள் திட்டத்தின் கீழ் பழனி கோயிலில் தூத்துக்குடி மண்டல பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஒரு கதவு மூடினால்...

அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருத்துறைப்பூண்டியில் குழந்தைகள் தின விழா

SCROLL FOR NEXT