ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் 
வணிகம்

ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையமிடமிருந்து ரூ.9,270 கோடிக்கு சுங்கச்சாவடி செயல்பாடு மற்றும் பரிமாற்றம் திட்டத்தை ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் வென்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையமிடமிருந்து ரூ.9,270 கோடிக்கு சுங்கச்சாவடி செயல்பாடு மற்றும் பரிமாற்றம் திட்டத்தை ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் வென்றதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் 4% உயர்ந்தன.

பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 3.78% உயர்ந்து ரூ.44.53 ஆகவும் என்எஸ்இ-யில் 3.12% உயர்ந்து ரூ.44.30 ஆக முடிவடைந்தன. அதே வேளையில் இன்றைய இன்ட்ராடே அமர்வில், நிறுவனத்தின் பங்குகள் 7.04% மற்றும் 6.96% உயர்ந்து ரூ.45.93 மற்றும் ரூ.45.95 ஐ எட்டியது.

மொத்த வர்த்தகத்தின் அடிப்படையில், ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்களின் 9.8 கோடி பங்குகள் என்எஸ்இ-யிலும், அதே வேளையில் 54.73 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யில் வர்த்தகமானது.

இதையும் படிக்க: 6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலாண்டு வருவாய் அறிவிப்புக்குப் பிறகு ரிலையன்ஸ் 3% சரிவு!

மீண்டும் வெல்வோம்! நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வருவோம்! - முதல்வர் Stalin

தெரியாத 3 எழுத்து “பயம்” தெரிந்த 3 எழுத்து “வீரம்” - Seeman

ஹைதராபாத்தில் 4 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 6 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

கமல் தலைமையில் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்!

SCROLL FOR NEXT