பங்குச் சந்தை ANI
வணிகம்

6-ஆவது நாளாக பங்குச் சந்தை முன்னேற்றம்

அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம், நிறுவனங்களின் வலுவான காலாண்டு செயல்திறன் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் ஆறாவது வர்த்தக நாளாக திங்கள்கிழமையும் முன்னேறம் கண்டன.

தினமணி செய்திச் சேவை

மும்பை / புது தில்லி: அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம், நிறுவனங்களின் வலுவான காலாண்டு செயல்திறன் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் ஆறாவது வர்த்தக நாளாக திங்கள்கிழமையும் முன்னேறம் கண்டன.

சென்செக்ஸ்: 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 388.17 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயர்ந்து 84,950.95-இல் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில், எட்டர்னல், மாருதி சுஸூகி இந்தியா, கோட்டக் மஹிந்திரா வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, டைட்டன், ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர்கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்வைக் கண்டன. டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிவைக் கண்டன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.4,968.22 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.8,461.47 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிஃப்டி: 50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 103.40 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயர்ந்து 26,013.45-இல் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT