கோப்புப் படம் 
வணிகம்

தொடர்ந்து 6வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு மேல் சென்று நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: வலுவான காலாண்டு செயல்திறனைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6-வது நாளாக இன்று உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு மேல் சென்று நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 388.17 புள்ளிகள் உயர்ந்து 84,950.95 புள்ளிகளாகவும், நிஃப்டி 103.40 புள்ளிகள் உயர்ந்து 26,013.45 புள்ளிகளாக நிறைவடைந்தது. இந்த வலுவான கொள்முதலுக்கு உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் உந்துதலாக இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்த பிறகு முதலீட்டாளர்களின் மனநிலை மேம்பட்டதும் மற்றும் மிட்கேப்களின் வலுவான Q2 வருவாய்களால் எதிர்பார்த்ததை விட பங்குச் சந்தை வலுப்பெற்றது.

சென்செக்ஸில் எடர்னல், மாருதி சுசுகி இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, டைட்டன், எச்டிஎஃப்சி வங்கி, பவர்கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்ந்த நிலையில் மறுபுறம் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் பஜாஜ் ஆட்டோ, டாடா கன்ஸ்யூமர், ஐஷர் மோட்டார்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், மாருதி சுசுகி ஆகியவை உயர்ந்த நிலையில் டிஎம்பிவி, அதானி எண்டர்பிரைசஸ், ஜியோ ஃபைனான்சியல், இன்டர்குளோப் ஏவியேஷன், அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

அனைத்து துறை குறியீடுகளும் ஆட்டோ, வங்கி, ரியல் எஸ்டேட், மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், பொதுத்துறை வங்கி உள்ளிட்டவை 0.5 முதல் 1% வரை உயர்ந்து முடிவடைந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், ட்ரூ-ஆல்ட் பயோஎனெர்ஜி பங்குகள் 2% அதிகரித்தன. வெப்சோல் எனர்ஜி சிஸ்டம் பங்குகள் APEDB உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் 4% சரிந்தன.

அசோகா பில்ட்கான் பங்குகள் 83% காலாண்டு லாப சரிவுக்குப் பிறகு 5% சரிந்தன. 2-வது காலாண்டில் லாபம் 248% அதிகரித்த பிறகு ஜிஎம்ஆர் பவர் பங்குகள் விலை 7% அதிகரித்தன. சிறந்த காலாண்டு வருவாய் காரணமாக நாராயணா ஹ்ருதயலா பங்குகள் 15% உயர்ந்தன.

Q2 லாபம் ஈட்டியதால் V2 ரீடைல் பங்குகள் 1.4% உயர்ந்தன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடமிருந்து அங்கீகாரக் கடிதம் பெற்றதையடுத்து ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்தன. இந்த வாரம் பங்குப் பிரிப்பை பரிசீலிக்க வாரியம் திட்டமிட்டதால் கோட்டக் மஹிந்திரா வங்கி பங்குகள் 1.2% அதிகரித்தன.

ஹீரோ மோட்டோகார்ப், மாரிகோ, சிட்டி யூனியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, அசாஹி இந்தியா, லாரஸ் லேப்ஸ், பிஎன்பி, யுபிஎல், பிபிசிஎல், எம்சிஎக்ஸ் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ, கேன் ஃபின் ஹோம்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், நவின் ஃப்ளூரின், ஸ்டார் ஹெல்த், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.

ஆசிய சந்தைகளில், ஹாங்காங் ஹேங் செங், ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஜப்பான் நிக்கி 225 உள்ளிட்டவை சரிந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி உயர்ந்தன.

அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.70% குறைந்து 63.94 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

சேலை, கடற்கரை, மணல், சூரியன்... நடாஷா சிங்!

உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே... நிதி ஷா!

கிரேட்புல்... பிரிகிடா சாகா!

SCROLL FOR NEXT