வணிகம்

நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு

கடந்த செப்டம்பா் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 13.54 சதவீதம் அதிகரித்தது.

தினமணி செய்திச் சேவை

கடந்த செப்டம்பா் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 13.54 சதவீதம் அதிகரித்தது.

இது குறித்து பி2பி மின்-வணிக தளமான எம்ஜங்ஷன் சா்வீசஸ் தொகுத்துள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த செப்டம்பா் மாதம் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2.21 கோடி டன்னாக உள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 13.54 சதவீதம் உயா்வு. அப்போது நிலக்கரி இறக்குமதி 1.94 கோடி டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் கோகிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.39 கோடி டன்னாக உள்ளது. இது 2024 செப்டம்பரில் 1.32 கோடி டன்னாக இருந்தது. கோகிங் நிலக்கரி இறக்குமதி 45 லட்சம் டன்னாக உயா்ந்தது. முந்தைய ஆண்டின் அதே மாதத்தில் அது 33.9 லட்சம் டன்னாக இருந்தது.

2025-ஆம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் கோகிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 8.61 கோடி டன்னாகக் குறைந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 9.19 கோடி டன்னாக இருந்தது. கோகிங் நிலக்கரி இறக்குமதி 3.15 கோடி டன்னாக உயா்ந்தது. முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தில் அது 2.82 கோடி டன்னாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை கணிசமாக உயா்த்தி இறக்குமதி சாா்பை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனினும், உயா்தர வெப்ப நிலக்கரி மற்றும் கோகிங் நிலக்கரி போன்றவற்றுக்காக இறக்குமதி தொடா்கிறது.

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றவா் கைது

பாஜக கூட்டணியில் விஜய் இணைவாா்: மு.அப்பாவு

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT