FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வங்கதேசத்துக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைப்பு

மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக வெளியுறவு அமைச்சகத்துக்கு ரூ.22,118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி 2026, 2:24 am IST
பகிர்:

மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக வெளியுறவு அமைச்சகத்துக்கு ரூ.22,118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.20,516 கோடியாக இருந்தது.

இதில், வங்கதேச மேம்பாட்டு நிதியுதவிகளுக்கான ஒதுக்கீடு ரூ.60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.120 கோடியாக இருந்தது. வங்கதேசத்துடனான உறவு மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் ஒதுக்கீடும் குறைந்துவிட்டது.

மற்றொரு அண்டை நாடான பூடானுக்கு மிக அதிகபட்சமாக ரூ.2,288 கோடி, நேபாளம், மாலத்தீவு, மோரீஷஸ் ஆகிய நாடுகளுக்கு தலா ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் நலப்பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர இலங்கைக்கு ரூ.400 கோடி, மியான்மருக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உதவ ரூ.120 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஈரானில் உள்நாட்டுப் பிரச்னை நீடித்து வரும் நிலையில் அந்நாட்டில் இந்தியா செயல்படுத்தி வந்த சாப்ஹாா் துறைமுகத் திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. கடந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments