ஜிண்டால் ஸ்டீல் Q2 நிகர லாபம் 21% உயர்வு!
ஜிண்டால் ஸ்டீல், நிதியாண்டின் செப்டம்பர் வரையான காலாண்டில் 21 சதவீதத்திற்கும் மேலாக அதன் ஒருங்கிணைந்த லாபம் ரூ. 771 கோடியாக உயர்ந்துள்ளது.
புதுதில்லி: ஜிண்டால் ஸ்டீல், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் 21 சதவீதத்திற்கும் மேலாக அதன் ஒருங்கிணைந்த லாபம் உயர்ந்து ரூ. 771 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
நவீன் ஜிண்டாலுக்குச் சொந்தமான எஃகு தயாரிப்பு நிறுவனம், கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் ரூ.1,646 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது.
நிதியாண்டின் 2வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம், கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் இருந்த ரூ.12,119.03 கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து ரூ.15,289.20 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் மொத்த வருவாய் 44 சதவீதம் அதிகரித்து ரூ. 19,448 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் மொத்த வருவாய் ரூ. 13,505 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர கடன் செப்டம்பர் வரையான காலாண்டின் முடிவில் ரூ.14,786 கோடியாக இருந்தது. முதல் காலாண்டில் இது ரூ.15,927 கோடியாக இருந்தது.
Jindal Steel on Friday posted a more than 21 per cent rise in consolidated net profit to Rs 771 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.