வணிகம்

கா்நாடக வங்கி நிகர லாபம் 9% அதிகரிப்பு

தனியாா் துறையைச் சோ்ந்த கா்நாடக வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 9.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறையைச் சோ்ந்த கா்நாடக வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 9.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.319.12 கோடியாக உள்ளது. முந்தைய 2025-ஆம் நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.1 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.292.40 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.728.12 கோடியாக உள்ளது.

2025 ஜூன் இறுதியில் 3.46 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் செப்டம்பா் மாத இறுதியில் 3.33 சதவீதமாகவும், 1.44 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் 1.35 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT