மும்பை: இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் மீண்டெழுந்தன நிலையில், முந்தைய அனைத்து அமர்வுகளை சமன் செய்து, ஐடி மற்றும் நிதித்துறையின் தலைமையில் நிஃப்டி குறியீடு 26,000 புள்ளிகளுக்கு மேல் சென்று நிறவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில், ஒரு மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகள் வலிமையைப் பெற்ற நிலையில், நிஃப்டி 26,000 புள்ளிகளைக் கடந்தது. இருப்பினும், நடுப்பகுதியில் முதலீட்டாளர்கள் லாப முன்பதிவை செய்த நிலையில், குறியீடுகள் நாளின் உச்சத்தை நெருங்கி முடிவடைந்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 513.45 புள்ளிகள் உயர்ந்து 85,186.47 ஆகவும், நிஃப்டி 142.60 புள்ளிகள் உயர்ந்து 26,052.65 புள்ளிகளாக நிலைபெற்றது. பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு 0.3% உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.4% சரிந்தன.
நிஃப்டி வங்கி தொடர்ந்து மூன்றாவது அமர்விலும் புதிய சாதனை உச்சத்தை படைத்து, அதன் குறியீட்டெண் 59,264.25 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டிய பிறகு 59,216.05 புள்ளிகளாக நிறைவடைந்தன.
துறை ரீதியாக, ஐடி குறியீடு 3% உயர்ந்ததும், பொதுத்துறை நிறுவன வங்கி குறியீடு 1.2% அதிகரித்தது. அதே வேளையில் மீடியா குறியீடு 0.3% மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடு 0.4% சரிந்தன.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி-யில் உயர்ந்த நிலையில் டிஎம்பிவி, கோல் இந்தியா, மாருதி சுசுகி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், கனடாவில் அதன் இருப்பை விரிவுபடுத்தியதால் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் பங்குகள் 4% உயர்ந்தன. மேற்கு ரயில்வேயின் ஆர்டர் பெற்ற போதிலும் ஜி.ஆர். இன்ஃப்ராபிராஜெக்ட்ஸ் பங்குகள் 2% சரிந்தன.
இன்ஃபோசிஸ் பங்குகள் திரும்பப் பெறுவதற்கான சலுகைக்கு முன்னதாக 4% அதிகரித்தன. இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் கிட்டத்தட்ட 2% அதிகரித்த நிலையில், யுஎஸ்எஃப்டிஏ (USFDA) ஒப்புதல் அளித்த போதிலும் பயோகான் பங்கு விலை 3% சரிந்தன. செபியின் எச்சரிக்கை கடிதத்தின் பேரில் தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகை பங்கு விலை 1.2% சரிந்தன.
பிராட் & விட்னி கனடா கார்ப் நிறுவனத்துடன் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பேரில் ஆசாத் இன்ஜினியரிங் பங்குகள் 2% உயர்ந்தன. புதிய பவர் கிரிட் திட்டங்களிலிருந்து நிறுவனம் 9 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டதை அடுத்து கே.இ.சி. இன்டர்நேஷனல் பங்குகள் 9% சரிந்தன. மோர்கன் ஸ்டான்லி மதிப்பீட்டைத் தொடர்ந்து எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் 3% உயர்ந்தன. வருமான வரி அதிகாரிகள் நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் வசதிகளைப் பார்வையிடுவதால் வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிந்தன.
பாரத் ஃபோர்ஜ், எம்&எம் ஃபைனான்சியல், எம்சிஎக்ஸ் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், ஃபெடரல் வங்கி, டைட்டன் கம்பெனி, எஸ்பிஐ, பிஹெச்இஎல் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
மறுபுறம் கோத்ரெஜ் அக்ரோவெட், யுனைடெட் ப்ரூவரீஸ், தெர்மாக்ஸ், ஷீலா ஃபோம், வேதாந்த் ஃபேஷன்ஸ், எஸ்கேஎஃப் இந்தியா, தீபக் நைட்ரைட், வெஸ்ட்லைஃப் ஃபுட்வேர்ல்ட் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்தபட்சத்தை தொட்டது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.25% குறைந்து 64.73 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: மின்சாரக் காா்கள் விற்பனை 57% உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.