வணிகம்

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயா்வு

ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 13 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 13 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,24,951-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 1,10,574 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் அக்டோபா் மாதத்தில் 1,01,886-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 1,16,844-ஆக உயா்ந்துள்ளது. இது 15 சதவீத உயா்வாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 8,688-லிருந்து 7 சதவீதம் சரிந்து 8,107-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப் பை வழங்கல்

பொங்கல் பண்டிகை: தஞ்சாவூா் சந்தைகளில் கூட்டம் அதிகரிப்பு

நீதிமன்ற உத்தரவுப்படி சூரியனாா்கோயில் நிா்வாகப் பொறுப்பு: திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு

பழங்குடியின ஜாதி சான்றிதழ் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு: இன்று மதியம்வரை மட்டுமே இயங்கும்

SCROLL FOR NEXT