மும்பை: மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.89ஐ தாண்டியது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளின் எதிர்மறையான குறிப்புகளுக்கு மத்தியில், டாலருக்கு நிகராக 78 காசுகள் குறைந்து ரூ.89.46 ஆக வர்த்தகமானது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ.88.67 ஆக தொடங்கி 82 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகராக ரூ.89.40 ஆக வர்த்தகம் ஆவதற்கு முன்பு, அதன் மிகக் குறைந்த விலையான ரூ.89.50 ஐ எட்டியது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 20 காசுகள் குறைந்து ரூ.88.68 ஆக நிறைவடைந்தது.
செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ரூபாய் மதிப்பு அதன் முந்தைய அனைத்து நேர இன்ட்ரா-டே உடைத்து அதன் குறைந்த பட்சமான ரூ.88.85 ஐ பதிவு செய்தது. அதற்கு முன்பு அக்டோபர் 14 ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகாரக இந்திய ரூபாய் மதிப்பு அதன் குறைந்த நிலையான ரூ88.81 ஆக பதிவானது.
இதற்கு முன்னதாக, ஜூலை 30 ஆம் தேதி இந்திய ரூபாய் 89 காசுகள் சரிந்து நாளில் மிக மோசமான சரிவைக் கண்டது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.