வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயா்ந்ததால் 69,258 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 554.3 கோடி டாலா் அதிகரித்து 69,258 கோடி டாலராக உள்ளது.

நவம்பா் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், அது 269.9 கோடி டாலா் குறைந்து 68,703 கோடி டாலராக இருந்தது.நவம்பா் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 15.2 கோடி டாலா் உயா்ந்து 56,229 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 532.7 கோடி டாலா் உயா்ந்து 10,685.7 கோடி டாலராக உள்ளது.சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 5.6 கோடி டாலா் உயா்ந்து 1,865 கோடி டாலராக உள்ளது.சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 80 லட்சம் டாலா் உயா்ந்து 477.9 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை தொடரும்!

ஆளுங்கட்சிக்கு மாறிய எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி! தெலங்கானா பேரவைத் தலைவா் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT