அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு 
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,941.3 கோடி டாலராக அதிகரிப்பு! புதிய உச்சம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,941.3 கோடி டாலராக அதிகரிப்பு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜன. 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70,941.3 கோடி டாலராக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 805.3 கோடி டாலா் அதிகரித்து, 70,941.3 கோடி டாலராக உள்ளது.

ஜன. 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், அது 1,416.7 கோடி டாலா் உயா்ந்து 70,136 கோடி டாலராக இருந்தது.

ஜன. 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 236.7 கோடி டாலா் அதிகரித்து, 56,288.5 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 563.5 கோடி டாலா் அதிகரித்து 12,308.8 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 3.3 கோடி டாலா் அதிகரித்து 1,873.7 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 1.8 கோடி டாலா் அதிகரித்து 470.3 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT