ரூ.6,931 வாராக் கடனை கைமாற்ற பந்தன் வங்கி முடிவு
ரூ.6,931 வாராக் கடனை கைமாற்ற பந்தன் வங்கி முடிவு
வணிகம்ரூ.6,931 வாராக் கடனை கைமாற்ற பந்தன் வங்கி முடிவு
ரூ.6,931 வாராக் கடனை கைமாற்ற பந்தன் வங்கி முடிவு
தனியாா் துறை வங்கியான பந்தன் வங்கி, பாதுகாப்பற்ற ரூ.6,931 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்களுக்கு கைமாற்ற முடிவு செய்துள்ளது.
இது குறித்து வங்கி பங்குச் சந்தையிடம் சமா்ப்பித்துள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கியின் சொத்து நிலவரத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.6,931 கோடி சில்லறை வாராக் கடன்களை (வாராக் கடன்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகள் உட்பட) சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்கள் மற்றும் பிற தகுதியான நிறுவனங்களுக்கு கைமாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 2025 செப்டம்பா் 30 நிலவரப்படி 180 நாள்களுக்கும் மேல் திருப்பிச் செலுத்தப்படாத ரூ.3,212.17 கோடி கடன்களும், தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.3,719.14 கோடி கணக்குகளும் அடங்கும்.
இந்த கடன்கள் பெரும்பாலும் வங்கியின் குறு மற்றும் சிறு வணிக கடன் திட்டங்களான வளரும் தொழில் பிரிவுக்கு வழங்கப்பட்டவை. குழும கடன்கள், சிறு வணிக கடன்கள், விவசாய கடன்கள் மற்றும் இதர பாதுகாப்பற்ற சில்லறை கடன்களும் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.