வணிகம்

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு: கிரிசில்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான கணிப்பை கிரிசில் 6.5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா: நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் எதிர்பார்ப்புகளை விட 8% வளர்ச்சி தென்பட்டதை தொடர்ந்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான கணிப்பை கிரிசில் 6.5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

2-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2% இருந்தது. இது எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்தது என்று கிரிசிலின் தலைமை பொருளாதார நிபுணர் ஜோஷி தெரிவித்தார்.

இருப்பினும், பணவீக்கம் தளர்வால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7% ஆக இருந்தது.

முதல் பாதியில் 8% வளர்ச்சியும், அமெரிக்க வரிகள் அதிகரிப்பின் தாக்கத்தால் இரண்டாம் பாதியில் 6.1% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் தனியார் நுகர்வானது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருப்பதாக தெரிவித்துள்ளது கிரிசில்.

விநியோகப் பக்கத்திலிருந்து, உற்பத்தி மற்றும் சேவைகளில் வளர்ச்சி குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது. உணவுப் பணவீக்கம் குறைவாக இருப்பது நாட்டில் மற்ற செலவினங்களைத் தூண்டியதாக தெரிவித்தார்.

அதே வேளையில் இந்த சாதகமான சூழ்நிலைகளால் 3-வது காலாண்டு தொடர்ந்து பயனடையும் என்றார் ஜோஷி.

இதையும் படிக்க: ஐஷா் மோட்டாா்ஸ் நிகர லாபம் 20% உயா்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தையின் நுரையீரலில் 3 மாதங்களாக சிக்கியிருந்த ‘விசில்’: நுட்பமாக அகற்றிய அரசு மருத்துவா்கள்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்: வைகோ

மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் விளையாட்டு மைதானங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பதற்றமான புவிஅரசியல் சூழலிலும் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மை : ஹா்தீப் சிங் புரி

மே. வங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது: நட்டா

SCROLL FOR NEXT