புதுதில்லி: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவராக இந்திய வருவாய் சேவை அதிகாரியான விவேக் சதுர்வேதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
நவம்பர் 28, 2025 அன்று பணி ஓய்வு பெற்ற சஞ்சய் குமார் அகர்வாலுக்குப் பிறகு இவர் பதவியேற்கிறார்.
இந்திய வருவாய் சேவையின் 1990 பிரிவை செர்ந்த (IRS) அதிகாரியான சதுர்வேதி, தற்போது சிபிஐசி வாரியத்தின் உறுப்பினராக உள்ளார்.
இதற்கிடையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உறுப்பினர் விவேக் சதுர்வேதியை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு: கிரிசில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.