வணிகம்

டிவிஎஸ் விற்பனை 12% உயா்வு

கடந்த செப்டம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 12 சதவீதம் உயா்ந்தது.

தினமணி செய்திச் சேவை

கடந்த செப்டம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 12 சதவீதம் உயா்ந்தது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,41,064-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,82,495 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2024-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 4,71,792-ஆக இருந்த நிறுவன இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 11 சதவீதம் வளா்ச்சியடைந்து 5,23,923-ஆக உள்ளது. இருசக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 3,69,138-லிருந்து 12 சதவீதம் அதிகரித்து 4,13,279-ஆக உள்ளது.

2024 செப்டம்பரில் 1,11,007-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2025 செப்டம்பரில் 10 சதவீதம் அதிகரித்து 1,22,108-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது

கள்ளக்குறிச்சி: கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கனாங்கொல்லை, பெருவங்கூரில் புதிய துணை மின் நிலையங்களுக்கு அடிக்கல்

பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

நீட் தோ்வை எதிா்கொள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 6-ஆம் வகுப்பு முதல் பயிற்சி: புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

SCROLL FOR NEXT