மும்பை: ஐடி மற்றும் நிதித்துறையின் தலைமையில் இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 3வது அமர்வாக நிஃப்டி 50 குறியீடு 25,000 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிவடைந்தன.
குறியீடுகள் உயர்ந்த நிலையில் தொடங்கி வர்த்தகமான நிலையில், சென்செக்ஸ் 639.25 புள்ளிகள் உயர்ந்து 81,846.42 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 50 குறியீடு 25,000 புள்ளிகளைத் கடந்து சென்று இன்றைய அதிகபட்சமான 25,095.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 582.95 புள்ளிகள் உயர்ந்து 81,790.12 ஆகவும், நிஃப்டி 183.40 புள்ளிகள் உயர்ந்து 25,077.65 ஆகவும் இருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.7 சதவிகிதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு சற்று குறைந்தும் முடிவடைந்தன.
சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.
நிஃப்டி 50 குறியீட்டில் மேக்ஸ் ஹெல்த்கேர், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், ஐடிசி மற்றும் என்டிபிசி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
துறைகளில் ஐடி குறியீடு 2 சதவிகிதம் உயர்ந்தன. சுகாதாரக் குறியீடு 1% உயர்ந்ததும், தனியார் வங்கி குறியீடு 1.2% உயர்ந்ததும், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 0.7% உயர்ந்த நிலையில் பொதுத்துறை வங்கி குறியீடு 0.4% உயர்ந்தன.
அதே வேளையில் உலோகம், ஊடகம், எஃப்எம்சிஜி உள்ளிட்டவை 0.3 முதல் 0.9% வரை சரிந்தது முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், பிளாக் வர்த்தகத்திற்குப் பிறகு ஆதித்யா பிர்லா லைஃப் பங்குகள் 7% அதிகரிப்பு. இரண்டாவது காலாண்டு முடிவுகளை அடுத்து எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 1% உயர்வுடன் நிறைவு.
மேக்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகள் மையத்தின் சிஜிஹெச்எஸ் (CGHS) விகிதங்களைத் திருத்திய பிறகு தலா 2 முதல் 6% வரை உயர்ந்தன. மகாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனத்திடமிருந்து ஒதுக்கீடு கடிதம் பெற்ற நிலையில் சீகால் இந்தியா நிறுவன பங்குகள் 2.4% அதிகரிப்பு.
காலாண்டு வருவாயில் வளர்ச்சி இருந்தபோதிலும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் 2.6% சரிந்தன. 2வது காலாண்டு மொத்த வணிகம் அதிகரித்த பிறகு தனலட்சுமி வங்கி பங்குகள் 3% உயர்வு. லூபின் பங்குகளின் விலை கிட்டத்தட்ட 2% சரிவுடன் நிறைவு.
வோடபோன் ஐடியாவின் ஏஜிஆர் நிவாரணத்திற்கான மனு மீதான விசாரணை அக்டோபர் 13 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டதால் அதன் பங்குகள் 4% சரிந்தன. செப்டம்பர் மாத வாடிக்கையாளர் அதிகரித்தால் ஏஞ்சல் ஒன் பங்குகள் 2.7% அதிகரிப்பு.
ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.78% உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 65.68 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வராம் வெள்ளிக்கிழமை ரூ.1,583.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.88.82 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.