மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக இன்றயை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.88.82 ஆக முடிவடைந்தது.
தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி மற்றும் புவிசார் அரசியல் உள்ளிட்டவையால் இந்திய ரூபாய் மதிப்பு அழுத்தத்தில் இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.75 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், முடிவில் 3 காசுகள் சரிந்து ரூ.88.82-ஆக முடிவைந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எட்டு காசுகள் குறைந்து ரூ.88.79 ஆக இருந்தது.
செப்டம்பர் 30 தேதியன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து ரூ.88.80 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: பங்குச் சந்தை மூன்றாவது நாளாக உயர்வு: 25,000 புள்ளிகளை மீண்டும் கடந்தத நிஃப்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.