ANI
வணிகம்

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்...

தினமணி செய்திச் சேவை

தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டுவரும் நிலையில், இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 3.8 லட்சம் கோடி டாலராக (ரூ.337 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது.

இது குறித்து அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய குடும்பங்களில் பல தலைமுறைகளாக சேகரிக்கப்பட்டுள்ள தங்கத்தின் இருப்பு 34,600 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அந்தத் தங்க நகைகளின் மதிப்பு 3.8 லட்சம் கோடி டாலராக உள்ளது. அந்த வகையில் தங்கத்தின் விலை உயா்வு குடும்பங்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை உயா்த்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஜூலையில் வெளியிடப்பட்ட உலக தங்க கவுன்சில் அறிக்கையில், இந்திய வீடுகளில் தங்க நகைகளின் இருப்பு 25,000 டன்களாக மதிப்பிட்டது. அது தற்போது 34,600 டன்னாக உயா்ந்துள்ளது. உலக அளவில் தங்கம் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்வது நினைவுகூரத்தக்கது.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT