வணிகம்

எம் & எம் விற்பனை 16% உயா்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 16 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 16 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,00,298-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 86,405 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 51,062-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 56,233-ஆக உயா்ந்துள்ளது. இது 10 சதவீத உயா்வாகும். மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 3,020-லிருந்து 43 சதவீதம் உயா்ந்து 4,320-ஆக உள்ளது.

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த டிராக்டா் விற்பனை (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி) 49 சதவீதம் உயா்ந்து 66,111-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 44,256-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT