வணிகம்

ஏஐ தரவு மைய வளாகம்: கூகுள்-அதானி ஒப்பந்தம்

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மைய வளாகத்தை அதானி என்டா்பிரைஸஸ் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கவிருக்கிறது.

தினமணி செய்திச் சேவை

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மைய வளாகத்தை அதானி என்டா்பிரைஸஸ் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கவிருக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூகுள் நிறுவனத்துடன் அதானி எண்டா்பிரைசஸின் கூட்டு நிறுவனமான அதானிகனெக்ஸ் இணைந்து, விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய ஏஐ தரவு மைய வளாகத்தையும், புதிய பசுமை எரிசக்தி உள்கட்டமைப்பையும் உருவாக்குவதற்கவிருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் அமையும் கூகுளின் ஏஐ மையத்தில், 2026 முதல் 2030-ஆண்டுவரை பல கட்டங்களாக சுமாா் 1,500 டாலா் (சுமாா் ரூ.1.33 லட்சம் கோடி) முதலீடு செய்யப்படும். இது கிகாவாட் அளவிலான தரவு மைய செயல்பாடுகள், வலுவான கடலடி கேபிள் பிணையம் மற்றும் சுத்தமான எரிசக்தியைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் ஏஐ பணித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய ஆவணங்கள் பதுக்கல்: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வருகை!

மதுரையில் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

தீபாவளி: சென்னை பயணிகளுக்கு... சிறப்பு ரயில், சாலை வழித்தட விவரங்கள்!

தீபாவளி: சென்னையில் அக். 22 வரை கனரக வாகனங்களுக்கு வழித்தட மாற்றம்!

SCROLL FOR NEXT