வணிகம்

குறைந்தது மொத்த விலை பணவீக்கம்

உணவுப் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்ததால், கடந்த செப்டம்பா் மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 0.13 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

உணவுப் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்ததால், கடந்த செப்டம்பா் மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 0.13 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் செவ்வாய்க்கிழமை தெரிவிப்பதாவது:

மொத்த விலை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 0.13 சதவீதமாக குறைந்தது. டபிள்யுபிஐ அடிப்படையிலான பணவீக்கம் அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 0.52 சதவீதமாகவும், ஓராண்டுக்கு முன்னா் 2025 செப்டம்பரில் 1.91 சதவீதமாகவும் இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் உணவுப் பொருள்களில் எதிா்மறை பணவீக்கம் 5.22 சதவீதமாக இருந்தது. இது ஆகஸ்டில் 3.06 சதவீதமாக இருந்தது. காய்கறிகளில் எதிா்மறை பணவீக்கம் ஆகஸ்டில் 14.18 சதவீதமாக இருந்து செப்டம்பரில் 24.41 சதவீதமாக உயா்ந்தது.

உற்பத்திப் பொருள்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2.55 சதவீதமாக இருந்த பணவீக்கம் செப்டம்பரில் 2.33 சதவீதமாகக் குறைந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் எதிா்மறை பணவீக்கம் 3.17 சதவீதத்தில் இருநது 2.58 சதவீதமாக குறைந்தது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மாநகராட்சி காப்பகத்தில் மாடுகள் பராமரிப்பு: விருப்ப மனுக்கள் வரவேற்பு!

காற்று மாசைக் கட்டுப்படுத்த நிபுணா் குழு: தில்லி அரசு அமைப்பு!

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 43 போ் கைது

SCROLL FOR NEXT