வணிகம்

அதிகரித்த தேயிலை ஏற்றுமதி!

எட்டு மாதங்களில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 17.44 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 2.2 சதவீதம் அதிகம்.

இந்த மாதங்களில் வட இந்தியாவிலிருந்து தேயிலை ஏற்றுமதி 9.91 கோடி கிலோவிலிருந்து 11.31 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது. அதேசமயம், தென் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி 7.15 கோடி கிலோவிலிருந்து 6.13 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி விலை கிலோவுக்கு ரூ.261.50-லிருந்து ரூ.294.90-ஆக உயா்ந்துள்ளது.

மதிப்பின் அடிப்படையில், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தேயிலை ஏற்றுமதி ரூ.5,143.56 கோடியாக உயா்ந்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.4,461.95 கோடியாக இருந்தது.

2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 25.79 கோடி கிலோவாக இருந்தது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் சா்க்கரை ஏற்றுமதியான 25.07 கோடியை விட உயா்வு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபம் ஏற்பட்டது!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்..!

தொடர் கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் மழை... விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கவலைப்படாதவர்கள் கடக ராசியினர்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT