பங்குச்சந்தை நிலவரம் 
வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 860 புள்ளிகள் உயர்வு! 25,600 -யை எட்டிய நிஃப்டி!!

பங்குச்சந்தை நிலவரம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,794.79 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் காலையில் 500 புள்ளிகள் ஏற்றமடைந்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 862.23 புள்ளிகள் அதிகரித்து 83,467.66 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.75 புள்ளிகள் உயர்ந்து 25,585.30 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

2 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் முடிந்த நிலையில் இன்றும் தொடர்ந்து 2-ம் நாளாக பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.46% மற்றும் 0.24% உயர்ந்தன.

அமெரிக்க-இந்திய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் சாத்தியமான ஃபெடரல் வட்டி விகிதக் குறைப்புகளும் பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

நிஃப்டியில் பொதுத்துறை வங்கியைத் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்தன. நிஃப்டி ஆட்டோ, வங்கி, நுகர்வோர் நீடித்த பொருட்கள், ரியாலிட்டி, எஃப்எம்சிஜி மற்றும் எண்ணெய் & எரிவாயு குறியீடுகள் 0.5% முதல் 1.7% வரை லாபத்தைப் பதிவு செய்தன.

நெஸ்லே இந்தியா, டாடா நுகர்வோர், டைட்டன் நிறுவனம், கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி அதிக லாபத்தைச் சந்தித்தன.

அதேநேரத்தில் ஹெச்டிஎப்சி லைஃப், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, ஜியோ ஃபைனான்சியல் மற்றும் எடர்னல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை குறைந்தன.

Market gains extend; Nifty near 25,600, Sensex up 862 pts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.21 கோடி!

இந்தியாவின் 50% தொழிலதிபர்கள் குஜராத்தியர்களாக இருப்பது எப்படி?

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு பெறலாம்

மத்திய அரசைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

மங்காத்தா முதல் நாள் வசூல்!

SCROLL FOR NEXT