வணிகம்

ஐடிபிஐ வங்கியின் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

ஐடிபிஐ வங்கி தனது 2-வது அதன் நிகர லாபம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து ரூ.3,627 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஐடிபிஐ வங்கி தனது 2-வது காலாண்டு நிகர லாபம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து ரூ.3,627 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனத்தின் முதலீடுகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த லாபமும் இதில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

எல்ஐசி கட்டுப்பாட்டில் உள்ள வங்கியானது 2024-25 ஆண்டின் 2-வது காலாண்டு காலகட்டத்தில் ரூ.1,836 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்தது.

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட், தனது ஐபிஓவில் சுமார் 11.11% பங்குகளை, அதாவது 2.22 கோடிக்கும் அதிகமான பங்குகளை, ஐடிபிஐ வங்கிக்கு முன்னுரிமை அடிப்படையில், பங்கு ஒன்றுக்கு ரூ.799.87 என்ற வெளியீட்டு விலையில் வழங்கியது. இந்த பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் வங்கிக்கு ரூ.1,698.96 கோடி நிகர லாபத்தை கிடைத்ததாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.44,490 கோடியாக உயா்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து அமைப்பினர் 13 பேர் கைது!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

SCROLL FOR NEXT