வணிகம்

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.44,490 கோடியாக உயா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் செயல்பாட்டு வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.44,490 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7,364 கோடியாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 13.2 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.6,506 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.44,490 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.40,986 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் மின்சாரம் தொடா்பான புகாா்களுக்கு...

கான்பூர்: நீதிமன்ற கட்டடத்தின் 6ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி

ஆா்.எம்.எல். மருத்துவமனைக்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து

கொலை வழக்கு; இருவா் குண்டா் சட்டத்தில் கைது

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் நிறுத்தம்: நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

SCROLL FOR NEXT