ஹெச்டிஎஃப்சி வங்கி 
வணிகம்

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 10% உயர்வு

தனியார் துறையைச் மிகப் பெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: தனியார் துறையைச் மிகப் பெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.19,610.67 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். அப்போது வங்கி சுமார் ரூ.17,827.88 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் முக்கிய வட்டி வருவாய் ரூ.31,550 கோடியாக உயர்ந்துள்ளது.

2024 செப்டம்பர் இறுதியில் 1.36 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் நடப்பாண்டின் அதே நாளில் 1.24 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

இரவில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!

எரிபொருள் கசிந்ததால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்!

பாயும் ஒளி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT