முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்...

தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம்...

Updated On : 21 அக்டோபர், 2025 at 4:16 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,080 உயர்ந்துள்ளது.

நிகழாண்டுக்குள் தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தைத் தொடும் என்ற நிபுணர்களின் கணிப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலையானது காலை, மாலை என இருமுறை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் சவரன் ரூ.5,600 உயர்ந்து வெள்ளிக்கிழமை சவரன் ரூ.97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கத்தின் விலை ரூ.1,600, தீபாவளி நாளான நேற்று ரூ. 640 குறைந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 2,080 அதிரடியாக மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 12,180, ஒரு சவரன் ரூ. 97,440 ஆக விற்பனையாகி வருகின்றது.

இதனிடையே, வெள்ளியின் விலை ரூ. 2 குறைந்து ரூ. 188-க்கும், ஒரு கிலோ ரூ. 1,88,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

The price of gold jewellery in Chennai rose sharply by Rs 2,080 per sovereign on Tuesday morning.

முழு கட்டுரையைப் படிக்க →