ஆரஞ்சு நிறத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐஃபோன் 17 ப்ரோ மற்றும் ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் செல்போன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐஃபோன் 17 மாடல்கள் விற்பனைக்கு வந்தது முதலே ஏதோ ஒரு சில குறைகள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த புகார் புதிதாக வந்துள்ளது.
இந்த போன்களை வாங்கியவர்கள் இது தொடர்பான புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஆப்பிள் ஐஃபோன் 17 ப்ரோ மாடலில், காஸ்மிக் ஆரஞ்சு எனப்படும் காவி நிறம் அதிகம் பேரால் விரும்பப்பட்டது. ஆனால், தற்போது, பலரும், இதன் நிறம் இளஞ்சிவப்பாக மாறிவிட்டதாகக் கூறி வருகிறார்கள்.
இந்த புகார்கள் குறித்து பொதுவாக வந்திருக்கும் கருத்து என்னவென்றால், அதிக ரசயானம் கொண்ட துடைக்கும் திரவத்தால், இதனை சுத்தம் செய்ததே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், ஆப்பிள் நிறுவன இணையதளத்திலும், ப்ளீச் அல்லது ஹைட்ரோஜென் பெராக்ஸைடு கொண்ட திரவங்களைக் கொண்டு ஃபோனை துடைக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த நிற மாற்றப் புகாருக்கு ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. எனவே, ஐஃபோன் ப்ரோ மாடலை வாங்கியவர்கள், தங்களது செல்போனை கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.