சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனையானது. அதன்படி கடந்த 3 நாள்களில் தங்கம் விலை பவுன் ரூ.4,800 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை அக்.22-இல் பவுன் ரூ.3,680 குறைந்து ரூ.92,320-க்கும், அக்.23-இல் பவுன் ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,400-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.91,200-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 3 நாள்களில் தங்கம் விலை பவுன் ரூ.4,800 குறைந்துள்ளது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.170-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.4,000 குறைந்து ரூ.1.70 லட்சத்துக்கும் விற்பனையானது.