தங்கம் விலை! 
வணிகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையொட்டி அசுர வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த அக். 17 ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ. 97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. 4 நாள்களில் சவரனுக்கு ரூ. 4,000 குறைந்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 11,500-க்கும், ஒரு சவரன் ரூ. 92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ. 11,540-க்கும், ஒரு சவரன் ரூ. 92,320-க்கும் விற்பனையாகிறது.

இதனிடையே, தொடர்ந்து குறைந்து வரும் வெள்ளியின் விலை, இன்றும் கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ. 171-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold prices rise again in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT