முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.78 ஆக நிறைவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.78 ஆக நிறைவடைந்தது.

Updated On : 24 அக்டோபர், 2025 at 6:23 PM
- PTI Graphics
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2025 at 6:16 PM

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.78 ஆக நிறைவடைந்தது.

இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கை மற்றும் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை இதற்கு துணைபுரிந்தன.

இருப்பினும், அந்நிய நிதி வெளியேற்றம், சற்றே வலுவான டாலர் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தை ஏற்பட்ட பலவீனமான போக்குகலால் சந்தை சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Updated On : 24 அக்டோபர், 2025 at 6:16 PM

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.78 ஆக தொடங்கி ரூ.87.63 முதல் ரூ.87.85 என்ற வரம்பில் வர்த்தகம் செய்யப்பட்டு, முந்தைய முடிவை விட 10 காசுகள் உயர்ந்து ரூ.87.78 ஆக நிலைபெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.87.88 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: 6 நாள் ஏற்றம் முடிவுக்கு வந்தது: சென்செக்ஸ் 344 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.