கோப்புப் படம் 
வணிகம்

டொயோட்டா விற்பனை 16% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 16 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 16 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 31,091-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 26,847 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 22,945-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 27,089-ஆக உயா்ந்துள்ளது. இது 18 சதவீத உயா்வாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 3,902-லிருந்து 3 சதவீதம் உயா்ந்து 4,002-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தை அறிவோம்...

டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு!

பறக்கும் ரயில்... புதிய பாதை

அமெரிக்க அணியில் ஜொலித்த இந்திய வம்சாவளி வீரர்கள்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!

சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT