யூகோ வங்கி 
வணிகம்

யூகோ வங்கி நிகர லாபம் 3% உயா்வு

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 2.82 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.620 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 2.82 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.603 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

2024 செப்டம்பா் இறுதியில் 3.18 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 2.56 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு 800 உயர்வு!

வங்கக் கடலில் புயல்! மீனவர்கள் கரை திரும்புக: கடலோர காவல்படை எச்சரிக்கை!!

கரூர் கூட்ட நெரிசல் பலி: வங்கி கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் நிதி!

மேட்டூர் அணை நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

கோவையில் கார் விபத்தில் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT