காளையின் ஆதிக்கம் - மும்பை பங்குச் சந்தை 
வணிகம்

டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்வு!

டாப் 10 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1,55,710.74 கோடி உயர்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: டாப் 10 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1,55,710.74 கோடி உயர்ந்துள்ளது. அதே வேளையில், உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட நேர்மறையான போக்குகளால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

கடந்த வாரம், பிஎஸ்இ குறியீடு 259.69 புள்ளிகள் உயர்ந்தது. நேற்றை முன்தினம் (வியாழக்கிழமை) 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் அதன் 52 வார உயர்வான 85,290.06 புள்ளிகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதனம் ரூ.46,687.03 கோடி அதிகரித்த நிலையில் அதன் சந்தை மூலதனம் ரூ.19,64,170.74 கோடியாக உயர்ந்தது. அதே வேளையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.36,126.6 கோடி அதிகரித்து ரூ.11,08,021.21 கோடியாக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.34,938.51 கோடி உயர்ந்து ரூ.6,33,712.38 கோடியாகவும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மதிப்பு ரூ.13,892.07 கோடி உயர்ந்து ரூ.8,34,817.05 கோடியாக உள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மூலதனம் ரூ.11,947.17 கோடி உயர்ந்து ரூ.6,77,846.36 கோடியாகவும், பாரதி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் ரூ.9,779.11 கோடி உயர்ந்து ரூ.11,57,014.19 கோடியாகவும் உள்ளது.

எல்ஐசி மூலதனம் ரூ.2,340.25 கோடி அதிகரித்து அதன் சந்தை மதிப்பு ரூ.5,62,513.67 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.43,744.59 கோடி குறைந்து ரூ.9,82,746.76 கோடியாக உள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவரின் மதிப்பீடு ரூ.20,523.68 கோடி குறைந்து ரூ.5,91,486.10 கோடியாக உள்ளது. அதே வேளையில் எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பீடு ரூ.11,983.68 கோடி குறைந்து ரூ.15,28,227.10 கோடியாக உள்ளது.

இதையும் படிக்க: ஆடி காா்கள் விற்பனை 18% சரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 66 போ் அனுமதி

மழை முன்னெச்சரிக்கை: பிற மாவட்டங்களில் இருந்து 120 தீயணைப்பு வீரா்கள் சென்னை வருகை!

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

மைசூா் - காரைக்குடி சிறப்பு ரயில் ரத்து

இந்தியாவின் ‘இ-நீதிமன்றங்கள்’ திட்டம்: பிரிட்டன் ஆா்வம்; செயல்பாடுகளை அறிய வருகை

SCROLL FOR NEXT