கோப்புப் படம் 
வணிகம்

2 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்வு!

ஆபரணத் தங்கம் சவரன் ரூ. 89,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கம் விலை சவரன் இன்று (அக். 29) ரூ. 1,080 உயர்ந்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கம் சவரன் ரூ. 89,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 11,210 விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளி விலை ரூ. 1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.168க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து அக். 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 97,600-க்கு விற்பனையானது. எனினும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை இறங்குமுகமாக இருந்து வந்தது.

நேற்றைய நிலவரபப்டி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,300-க்கும், ஒரு சவரன் ரூ. 90,400-க்கும் விற்பனையானது.

கடந்த இரு நாள்களாக தங்கம் விலை ரூ.3,600 வரை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி இன்று 22 காரட் சரவன் ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,680க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 11,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம் சவரன் ரூ. 1184 அதிகரித்துள்ளது. சவரன் ரூ. 97,832ஆகவும், கிராம் ரூ. 12,229 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

Gold silver rate hike

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 போட்டி!

8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்: ரஷ்மிகா மந்தனா

நவ. 5-ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்!

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?... சிம்ரன் கௌர்!

Tourist Family இயக்குநருக்கு BMW கார்!

SCROLL FOR NEXT