பங்குச்சந்தை நிலவரம் IANS
வணிகம்

26,050 புள்ளிகளில் முடிந்த நிஃப்டி! ஆட்டோ தவிர அனைத்து பங்குகளும் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் நேற்று சரிந்து முடிந்த நிலையில் இன்றைய(புதன்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,663.68 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 368.98 புள்ளிகள் உயர்ந்து 84,997.13 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக இன்று 85,105.83 என்ற புள்ளிகளை சென்செக்ஸ் எட்டியது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117.70 புள்ளிகள் உயர்ந்து 26,053.90 புள்ளிகளில் நிலை பெற்றது.

நிஃப்டியில் அதானி எண்டர்பிரைசஸ், பவர் கிரிட் கார்ப், என்டிபிசி, அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும். அதே நேரத்தில் டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், மாருதி சுசுகி, எடர்னல், எம் & எம், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.

சென்செக்ஸில் என்டிபிசி, பவர்கிரிட், அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்தையும் பாரத் எலக்ட்ரானிக்ஸ், எடர்னல், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுசுகி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை இழப்பையும் சந்தித்தன.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.7 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 0.6 சதவீதமும் உயர்ந்தன.

ஆட்டோ துறை தவிர (0.7% சரிவு) மீடியா, எரிசக்தி, உலோகம், ஊடகம், வங்கி, நிதி, எண்ணெய் & எரிவாயு என மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் நிறைவடைந்தன.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அதிபர் டிரம்ப் கூறியதுள்ளது பங்குச்சந்தையில் இன்று நேர்மறை தாக்கத்தை ஏற்ப்படுத்தியதாக கருதப்படுகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித குறைப்பு குறித்தும் இன்று முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

stock Market: Nifty closes above 26,050; Sensex gains 400 pts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திரத்தில் மோந்தா! கோணசீமாவில் சாய்ந்த வாழைகள்!

சிலம்பம் சுற்றிய முதல்வா்!

ஆலங்குளத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வா்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற மாணவியின் வீட்டுக்குச் சென்ற முதல்வா்

SCROLL FOR NEXT