வணிகம்

ஹூண்டாய் வருவாய் ரூ.17,461 கோடியாக உயா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா லிமிட்டெடின் செயல்பாட்டு வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் 17,460.82 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,572.26 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 14.3 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.1,375.47 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.17,460.82 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.17,260.38 கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 1,90,921-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 1 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 1,91,939 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

கதவே கடவுள்!

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

2-வது டி20: ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

நவ. 3 - 6 வரை வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்!

SCROLL FOR NEXT