முகப்பு
வணிகம்

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 7% உயா்வு

ஸ்ரீராம் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 1 நவம்பர் 2025, 3:06 am IST
பகிர்:

ஸ்ரீராம் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,314 கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.2,153 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.11,921 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.10,097 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் ரூ.9,815 கோடியிலிருந்து ரூ.11,551 கோடியாக உயா்ந்துள்ளது.

2024 செப்டம்பா் இறுதியில் 5.32 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 4.57 சதவீதமாகவும், 2.64 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் 2.49 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.