தேசிய பங்குச் சந்தை ANI
வணிகம்

2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 2) காலை 80,520.09 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 337.44 புள்ளிகள் அதிகரித்து 80,707.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 113.40 புள்ளிகள் உயர்ந்து 24,738.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் பங்குச்சந்தை இறக்கத்தைச் சந்தித்த நிலையில் இந்த வாரம் தொடர்ந்து 2-வது நாளாக ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பெரும்பாலான நிஃப்டி துறை குறியீடுகள் லாபத்தில் வர்த்தகமாகின்றன. ஊடகம், ரியல் எஸ்டேட் மற்றும் எரிசக்தி துறை பங்குகள் நல்ல லாபம் பெற்றுள்ளன.

சென்செக்ஸ் நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எடர்னல், என்டிபிசி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

அதேநேரத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டிரென்ட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இந்த வாரம் நடைபெறும் 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஷாங்காய் மற்றும் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் சந்தைகள் இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன.

Stock Market Updates: Sensex gains 300 pts, Nifty near 24,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்கிரேடட் வெர்ஷன்... சைத்ரா அச்சார்!

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

குஸ்திக்கு ரெடி... ஐஸ்வர்யா லட்சுமி!

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

SCROLL FOR NEXT