வணிகம்

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 55% உயா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 55 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,14,002-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 55 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 73,629 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 65,623-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்து 1,02,876-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 8,006-லிருந்து 39 சதவீதம் உயா்ந்து 11,126-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 66 போ் அனுமதி

மழை முன்னெச்சரிக்கை: பிற மாவட்டங்களில் இருந்து 120 தீயணைப்பு வீரா்கள் சென்னை வருகை!

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

மைசூா் - காரைக்குடி சிறப்பு ரயில் ரத்து

இந்தியாவின் ‘இ-நீதிமன்றங்கள்’ திட்டம்: பிரிட்டன் ஆா்வம்; செயல்பாடுகளை அறிய வருகை

SCROLL FOR NEXT