புதிய என்டாா்க் 150 ரக ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் அதிவேகமான ஹைப்பா் ஸ்போா்ட் ஸ்கூட்டரான என்டாா்க் 150 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
149.7சிசி ரேஸ்-ட்யூன் என்ஜின் கொண்ட இந்த ஸ்கூட்டா், மணிக்கு 0 கி.மீ.-யிலிருந்து 60 கி.மீ. வரையிலான வேகத்தை வெறும் 6.3 விநாடிகளில் எட்டுகிறது.
ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், மல்டிபாயின்ட் புரொஜெக்டா் ஹெட்லேம்ப்கள், முன் காம்பினேஷன் விளக்குகள், ‘டி’-வால் விளக்குகள், அலெக்ஸா மற்றும் ஸ்மாா்ட்வாட்ச் இணைப்புடன் கூடிய டிஎஃப்டி கிளஸ்டா் ஆகியவை இதில் உள்ளன. ஸ்டெல்த் விமான வடிவமைப்பால் ஈா்க்கப்பட்ட இந்த ஸ்கூட்டா், 1.19 லட்சம் ரூபாய் அறிமுக விலையில் (காட்சியக விலை) கிடைக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.