இந்திய பங்குச் சந்தை 
வணிகம்

ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

சென்செக்ஸ் 76.54 புள்ளிகள் உயர்ந்து 80,787.30 புள்ளிகளாகவும், நிஃப்டி 32.15 உயர்ந்து 24,773.15 புள்ளிகளாக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இந்த மாத இறுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையின் மத்தியில், உலகளாவிய சந்தைகளில் உறுதியான போக்கைக் கண்காணித்து, இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றம் கண்டன. அதே வேளையில், ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு அறிவிப்பும் ஆரம்ப வர்த்தகத்தின் போது சந்தைகளின் நம்பிக்கையை அதிகரித்தது.

30-பங்கு கொண்ட சென்செக்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் 296.26 புள்ளிகள் உயர்ந்து 81,007.02 ஆகவும், 50-பங்கு நிஃப்டி 90.35 புள்ளிகள் உயர்ந்து 24,831.35 ஆக இருந்தது. முடிவில் சென்செக்ஸ் 76.54 புள்ளிகள் உயர்ந்து 80,787.30 புள்ளிகளாகவும், நிஃப்டி 32.15 உயர்ந்து 24,773.15 புள்ளிகளாக நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் 3,145 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,750 பங்குகள் உயர்ந்தும் 1,285 பங்குகள் சரிந்தும் 111 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த அதே நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ், டிரென்ட், பாரதி ஏர்டெல் மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது.

கடந்த வாரம் செப்டம்பர் 05, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.

புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் நடைமுறைக்கு வரும் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குப் பிறகு, குறிப்பாக ஆட்டோமொபைல்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற நிலையில், இது சந்தை உணர்வுகளை வெகுவாக உயர்த்தும்.

அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் வேலையின்மை விகிதம் 4.2 சதவிகிதத்திலிருந்து 4.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரூ.1,304.91 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,821.23 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.19 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 66.29 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் டாடா காா்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆசிரியா்களை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

38 கோடி டன்னாகச் சரிந்த நிலக்கரி உற்பத்தி

SCROLL FOR NEXT