NSE கோப்புப்படம்
வணிகம்

பங்குச் சந்தை நிலவரம்: ஆட்டோமொபைல் பங்குகள் விலை உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

தினமணி செய்திச் சேவை

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,904.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 253.64  புள்ளிகள் அதிகரித்து 80,966.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.50 புள்ளிகள் உயர்ந்து 24,823.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மத்திய அரசு, வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைந்துள்ளதால் இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் பங்குகள் விலை 1.5% உயர்ந்துள்ளன.

குறிப்பாக டாடா மோட்டார்ஸ், எம் & எம், அசோக் லேலேண்ட், பாரத் ஃபோர்ஜ் ஆகிய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வருகின்றன. டாடா மோட்டார்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்தது.

அதேபோல உலோகத் துறை பங்குகளும் இன்று உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றனா. டாடா ஸ்டீல் அதிக லாபத்தை ஈட்டி வருகிறது.

நிஃப்டியில் டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் அதிக லாபம் பெற்ற நிறுவனங்களாகும்.

டிசிஎஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்து வருகின்றன.

Stock Market Updates: Sensex gains 250 pts, Nifty near 24,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்: விஜய் ஆண்டனி

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!

நேபாள போராட்டம் எதிரொலி: விவசாயத் துறை அமைச்சரும் ராஜிநாமா!

நேபாளத்தில் பதற்றம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

இட்லி கடை டிரைலர் தேதி!

SCROLL FOR NEXT