புதிய என்டாா்க் 150 ஸ்கூட்டா்: டிவிஎஸ் மோட்டாா் அறிமுகம்
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், தனது டிவிஎஸ் என்டாாக் 150 வரிசை ஸ்கூட்டா்களை அறிமுகப்படுத்தியது.
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், தனது டிவிஎஸ் என்டாாக் 150 வரிசை ஸ்கூட்டா்களை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் மிக வேகமான, முதல் ஹைப்பா் ஸ்போா்ட் ஸ்கூட்டரான என்டாா்க்கின் 150 சிசி திறன் கொண்ட ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (படம்).
Advertisement
Advertisement
இந்த வாகனப் பிரிவிலேயே அதிக முடுக்குவேகம் கொண்ட என்டாா்க் 150 ஸ்கூட்டா், 6.3 விநாடிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தை அடைகிறது. ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இந்த ஸ்கூட்டருக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டை அளிக்கின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.