இந்த வாரத்தில் 5-வது நாளும்(வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,758.95 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 353.41 புள்ளிகள் அதிகரித்து 81,902.13 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 113.95 புள்ளிகள் உயர்ந்து 25,119.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பும் இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையும் பங்குச்சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இன்றைய வர்த்தகத்தில் எஃப்எம்சிஜி தவிர ஆட்டோ, ஐடி, உலோகம், பொதுத்துறை நிறுவனம், ரியல் எஸ்டேட், மின்சாரம், நுகர்வோர் பொருள்கள், தொலைத்தொடர்பு என அனைத்துத் துறைகளும் 0.4 முதல் 1 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.3% உயர்ந்துள்ளன.
இன்ஃபோசிஸ், மாருதி, ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டூப்ரோ ஆகியவை முக்கிய லாபத்தைப் பெற்றன. இதில் அதிகபட்சமாக இன்ஃபோசிஸ் சுமார் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் இந்துஸ்தான் யூனிலீவர், எடர்னல், எச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன. இந்துஸ்தான் யூனிலீவர் சுமார் 1.22 சதவீதம் சரிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.